திருமண நாளன்று வாந்தி: சந்தேகத்தில் கன்னித்தன்மை சோதனை செய்த கணவன்

Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (18:33 IST)
திருமண நாளன்று மணப்பெண் வாந்தி எடுத்ததால், கன்னித்தன்மை சோதனை செய்த கணவன் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் மேட்ரிமோனியல் மூலம் நடந்தது. திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் மணப்பெண்ணின் தாயார் இறந்ததால் மணப்பெண் சோகமாக இருந்துள்ளார். மேலும் திருமண டென்ஷன் காரணமாக அவரது உடல்நிலையும் சோர்வானதால் தாலி கட்டிய சில நிமிடங்களில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, இரைப்பை அலர்ஜி காரணமாகவே அவர் வாந்தி எடுத்தது தெரிய வந்தது.
இருப்பினும் சந்தேகம் தீராத கணவன், மனைவிக்கு தெரியாமல் அவருக்கு கன்னித்தன்மை சோதனையும், கருத்தரிப்பு சோதனையும் செய்துள்ளார். இதனையறிந்த மனைவி அதிர்ச்சியாகி தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டார். தற்போது அந்த பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

சந்தேகம் என்ற நோயால் இல்லற வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னரே புதுமண தம்பதிகள் பிரிந்தது இருதரப்பின் உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :