ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை: டிடிவி தினகரன் எச்சரிக்கை

Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (18:02 IST)
அதிமுகவுடன் அமமுக இணையும் என்று மதுரை ஆதினம் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியதை டிடிவி தினகரன் மறுத்துள்ள நிலையில் இன்று மீண்டும் பேட்டியளித்த மதுரை ஆதினம், தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் அமமுக இணையும் என்றும், இது நடப்பது உறுதி என்றும் கூறினார். மதுரை ஆதினத்தின் இந்த பேட்டிக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவுடன் அமமுக இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக மீண்டும் மதுரை ஆதினம் தெரிவித்திருப்பதாகவும், யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து அவர் பரப்பி வருவதாகவும், தொடர்ந்து இதுபோன்ற பொய்ச்செய்திகளை மதுரை ஆதீனம் பரப்பி வந்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க விரும்புவதாகவும் தினகரன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவுடன் அமமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறும் மதுரை ஆதினம், அந்த பேச்சுவார்த்தையை யார் நடத்துகின்றார்கள் என்பதையும் கூறலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த டிடிவி தினகரனின் முழு அறிக்கை இதோ:இதில் மேலும் படிக்கவும் :