செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2019 (19:28 IST)

தலைவர் 166 படத்தில் ரஜினியின் கெட்டப் என்ன ? காஸ்ட்யூம் டிசைனர் கொடுத்த அப்டேட்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர் 166 படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் 10 தேதி முதல் மும்பையில் நடக்கவுள்ளது.
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின அப்டேட்ஸ் வந்தவண்ணமாகவே உள்ளது.
 
அந்த வகையில் தற்போது , தலைவர் 166 படத்திற்காக ரஜினியின் லுக் டெஸ்ட் இன்று நடந்துள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா பாஸின் இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதாவது, "ரஜினி சாரின் ட்ரையல் முடிந்தபிறகு.." என ஹோட்டலில் சாப்பிடும் விடியோவை அவர் பதிவிட்டுள்ளார். இதனால் சூப்பர்ஸ்டாரின் கெட்டப் என்னவாக இருக்கும் என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.
 

 
நிஹாரிகா பசின் கான்  ரஜினியின் பேட்ட படத்திலும் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.