ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (10:23 IST)

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது – 95 சதவீதம் தேர்ச்சி !

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மனதில் வைத்து 11 ஆம் வகுப்பு பாடங்களை ஒழுங்காக நடத்தாததால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஏற்கனவே ப்ளஸ் டு மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 95 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93. சதவீதமும் மாணவிகள் 96.5 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். சென்ற ஆண்டை விட ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 4 சதவீதத் தேர்ச்சி அதிகமாகியுள்ளது.