ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (07:33 IST)

இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதை அடுத்து இந்த தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் என்பது குறித்த தகவலை தற்போது பார்போம்
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகளும், ஆயிரம் தனித் தேர்வர்களும் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இருப்பினும் இணையதளங்கள் மூலமாகவும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
 
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பின்வருமாறு: 
 
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 
 
மேலும், மாவட்ட வாரியாக ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களிலும் அனைத்து நூலகங்களிலும் மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது