திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (23:23 IST)

ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2 ஆம் தேதியும், வாக்கு எண்ணும் பகுதிகளைச்  சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூட  மாவட்ட  ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.