செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 ஜனவரி 2025 (16:29 IST)

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

திருமணம் ஆகாதவர்கள் தங்க அனுமதி இல்லை என ஓயோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து, இளம் ஜோடிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ஓட்டல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஓயோ நிறுவனம் தங்களுடைய செக்-இன் கொள்கைகளில் மாற்றம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, திருமணம் ஆகாத தம்பதிகள் இனி அறைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், குடும்பங்கள், தனிப்பயணிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே தங்குவதற்கு அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக திருமணமாகாத தம்பதிகளுக்கு ஓயோ நிறுவனம் தங்க அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது திடீரென தங்களது கொள்கையை மாற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக்-இன் செய்யும்போது, அனைத்து ஜோடிகளும் தங்களுடைய திருமண ஆதாரத்தை வழங்க வேண்டும் என்றும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்பதிவுகளுக்கும் இது பொருந்தும் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து தங்களுடைய ஹோட்டல் நிறுவனங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதியின்படி, இனி திருமணம் ஆகாத ஆண்-பெண் இணைந்து ஒரே அறையில் தங்க முடியாது என்பது உறுதியாகியிருக்கிறது.


Edited by Siva