1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annamalai campaign in erode east election

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அண்ணாமலை பிரச்சாரம் செய்வாரா?

Annamalai
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வேட்ப மனுவை தாக்கல் செய்துவிட்டு விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அவர்களுக்கும் அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்களுக்கும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவின் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். விரைவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளார். 
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு நாள் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் அண்ணாமலை பிரச்சாரம் செய்வார் என பாஜக தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
67.74 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!