1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (12:02 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவை இந்தியாவே திரும்பி பார்க்கும்: செங்கோட்டையன்

sengottaian
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை இந்தியாவே திரும்ப பார்க்கும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோட்டில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பாக பெண்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
 
எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தேர்தல், ஜெயலலிதாவுக்கு மருங்காபுரி தேர்தல் போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்றும் இந்த தேர்தலை முடிவை இந்தியாவை திரும்பி பார்க்கும் அவர் தெரிவித்தார். 
 
எத்தனை தடைகள் வந்தாலும் 50,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவார் என்றும் இதனை அடுத்து பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva