1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (21:02 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: குழு அமைத்த பாஜக!

Annamalai
ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் அறிவிப்பு இன்று மாலை வெளியான நிலையில் இந்த தொகுதியில் நடைபெற வேண்டிய தேர்தல் பணிக்காக பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் வேதாந்தம் சரஸ்வதி பழனிச்சாமி உள்ளிட்ட 14 பேர்கள் உள்ளனர்
 
இது குறித்து அறிவிப்பை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது
 
இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இந்த தகவல் உதவி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva