செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 ஜனவரி 2025 (16:38 IST)

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வரும் 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதியில் இருந்து மட்டும் அல்லாமல், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை காண வருவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, ஜல்லிக்கட்டு காளைகளை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தற்போது முன்பதிவு செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க, நாளை முதல் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு காளைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Siva