புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (11:47 IST)

விழாவுக்கு வராத எடப்பாடியார்; எதிர் கட்சி தலைவர் ஓபிஎஸ்? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் அதிமுக எதிர்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவில் எதிர்கட்சி தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் மட்டுமே கலந்து கொண்டார். அதனால் ஓ.பன்னீர்செல்வமே அதிமுக சார்பில் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.