திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (09:58 IST)

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்; ட்விட்டரில் அப்டேட்! – இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொண்ட நிலையில் ட்விட்டரில் தமிழக முதல்வர் என அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றார். பதவியேற்பு முடிந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் “தமிழகத்தின் முதல்வர்” என்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து திமுக தலைவர் என்ற பொறுப்பும் உள்ளது. மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் தொண்டர்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.