1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK MLA meet today

எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்பது யார்? – அதிமுக இன்று தீவிர ஆலோசனை!

Tamilnadu
தமிழக முதலமைச்சராக இன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் 65 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக எதிர்கட்சி வரிசையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் எதிர்கட்சி தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், எதிர்கட்சியாக அதிமுக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா நோயாளி சென்ற விமானம்; கழன்று விழுந்த சக்கரம்! – மும்பையில் பரபரப்பு!