1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin car dmk flag removed

முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்; காரிலிருந்து திமுக கொடி நீக்கம்!

Tamilnadu
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து அவரது கார் முகப்பில் இருந்த திமுக கொடி அகற்றப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்கிறார். பதவியேற்பு முடிந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளார்.

தற்போது தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் முன்பாக அவர் பதவியேற்ற நிலையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவியேற்பு நடந்து வருகிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து அவரது கார் முகப்பில் இருந்து திமுக கொடி நீக்கப்பட்டு தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்; புதிய அத்தியாயம் தொடக்கம்! – ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள்!