வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (09:23 IST)

திடீரென விலை சரிந்த சின்ன வெங்காயம்: கிலோ ரூ40க்கு விற்பனை!

கடந்த மாதங்களில் வெங்காய விலை உச்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். வெக்காய தட்டுப்பாட்டால் எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அளவுக்கு நிலைமை இருந்தது.

தற்போது நிலமை கட்டுக்குள் வந்து வெங்காய வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை எக்கசக்கமாக குறைந்துள்ளது. நேற்று வரை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சின்ன வெங்காயம் இன்று கிலோ ரூ40 முதல் ரூ60 வரை விற்பனையாகி வருகிறது. பெரிய வெங்காயம் நேற்று வரை கிலோ ரூ100க்கு விற்பனையாகி வந்தது. இன்று விலை குறைந்து கிலோ ரூ30 முதல் ரூ40 வரை விற்பனையாகி வருகிறது.

வெங்காய விலை அதிரடியாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.