1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (16:08 IST)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; வீதியில் திரண்ட சிறுபான்மையினர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோயிலில் கிருஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல சிறுபான்மையின அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் பல மாவட்டங்களை தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிருஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.