வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (19:43 IST)

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்..

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதும் பின்பு எல்லையை கடந்ததாக கூறி அம்மீனவர்களை கைது செய்வது அல்லது சுட்டுத் தள்ளுவது போன்ற சம்பவங்கள் காலம் காலமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது. மேலும் அவர்களின் படகையும் இலங்கை கடற்படியினர் சிறை பிடித்துள்ளனர்.