புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (08:08 IST)

பாஜக பிரமுகர் கொலை ! காரணம் மதத்துவேஷமா ? காவல்துறை அறிவிப்பு !

திருச்சியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் மதப் பிரச்சனைக் காரணமாக கொல்லப்படவில்லை என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்ட பாஜக கட்சியில் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் விஜயரகு. தீவிரமாக பாஜகவுக்காக செயலாற்றி வந்தவர் என சொல்லப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல காந்தி மார்க்கெட் பகுதிக்கு சென்றவரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக மிட்டாய் பாபு என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். தனிப்பட்ட பிரச்சினையால் மிட்டாய் பாபு நிர்வாகி ரகுவை வெட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தலைவர்களோ இது மத ரீதியானக் காரணத்துக்காக செய்யப்பட்ட கொலை எனவும் கொலையில் ஈடுபட்டது இஸ்லாமிய தீவிரவாதிகள் எனவும் பேச ஆரம்பித்தனர். இதையடுத்து இதற்கு விளக்கமளித்த ஐஜி அமல்ராஜ் ’எங்கள் விசாரணையில் மதத்தின் அடிப்படையில் இந்தக் கொலை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. குற்றவாளிகளில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 10 ஆம் தேதிதான் ஜாமீனில் வெளியே வந்தார். மூன்று பேர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைவரையும் விரைவில் கைது செய்வோம்’. எனக் கூறியுள்ளார்.