வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (16:22 IST)

திமுகவை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை – நாஞ்சில் சம்பத் கருத்து !

தமிழர்களுக்கு திமுகவை விட்டால் இப்போது வேறு நாதியில்லை என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிய பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார், இதையடுத்து அவர் தாய்க்கழகமான அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் எதிர்ப்பின் காரணமாக அங்கு கதவுகள் மூடப்படவே இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன் திமுகவில் இணைந்தார். 

தங்க தமிழ்ச்செல்வனின் இந்த இணைப்பு குறித்து அமமுகவில் இருந்து ஏற்கனவே விலகி திமுக பேச்சாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத்திடம் கேட்ட போது கூறியபோது, 'கொள்கையற்ற அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகியது நல்லது என்றும், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கும் பலம் சேர்ப்பார் என்றும், அரசியலில் அம்மணமாக நிற்கிறார். அதிமுக, அமமுக வில் இருந்துவிட்டு திமுக வுக்கு வந்ததில் எந்த தவறும் இல்லை. கள அரசியலில் இருந்தவர்களால் ஓய்வுப் பெற முடியாது. அதிமுக பாஜகவின் பி டீம். வரும் காலத்தில் அந்தக் கட்சியே இருக்காது. தமிழர்களுக்கு இப்போது திமுக வை விட்டால் வேறு நாதியே இல்லை. கூடங்குளம். ஸ்டெர்லைட், மும்மொழிக் கொள்கை என எல்லாப் பிரச்சனைகளையும் திமுகதான் கையில் எடுத்துப் போராடுகிறது. ஆகவே தமிழர்கள் திமுகவைக் கொண்டாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.