வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (12:45 IST)

ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் – தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி !

சற்று முன்னர் திமுகவில் இனைந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் தற்போது பேசி வருகிறார்.

டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மன கசப்பால் அமமுகவில் இருந்து விரைவில் விலக்கப்பட்ட (விலகிய)  அமமுக வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், சற்று முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைந்தார். அவரோடு திமுக வின் முக்கியத் தலைவர்களான செ்ந்தில் பாலாஜி. வி.பி.கலைராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் திமுகவில் இணைந்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ‘தமிழகத்தை திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமேக் காப்பாற்ற முடியும் என மக்கள் தேர்தல் மூலம் சொல்லியுள்ளனர். அதனால் மக்களின் அந்த தீர்ப்பை மதித்து நான் திமுகவில் இணைந்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.