புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (09:35 IST)

இடைத்தேர்தலுக்காண நேர்காணல்: அதிமுகவில் 27 பேர் விருப்பமனு

அதிமுக சார்பில் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட பின்வாங்கிய நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள், களமிறங்கியுள்ளன. எதிர் எதிர் துருவங்கள் மோதுவதால் இந்த தேர்தல் சூடு பிடிக்கப்போவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக சார்பில் இதுவரை 27 பேர் விருப்பமனு பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட 18 பேரும், விக்கிரவாண்டியில் 9 பேரும் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் 3 மணி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனி பெறப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து விருப்பமனு அளித்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று, நாளை பேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே போல் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான நேர்காணலை திமுக நாளை நடத்த இருப்பது கூடுதல் தகவல்.