புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (07:48 IST)

காமராசருக்கு பின் காங்கிரஸ், கருணாநிதிக்கு பின் திமுக: மு.க.அழகிரி ஒப்பீடு

நேற்று திருப்பூர் வந்த பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த பின்னர் பேசியபோது, 'காமராஜர் எது போன்ற ஆட்சியை விரும்பினாரோ அந்த ஆட்சியைத்தான் மத்தியில் பா.ஜ.க செய்து வருகிறது என பெருமையுடன் கூறினார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். காமராஜர் என்ற பெயரை உச்சரிக்க கூட பாஜகவினர்களுக்கு தகுதியில்லை என்று கூறினர்.

இந்த நிலையில் 'காமராசருக்கு பின் காங்கிரஸ் எப்படி ஆட்சியை பிடிக்க முடியவில்லையோ அதே போல் கருணாநிதிக்கு பின் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.

ஒரே நாளில் பிரதமர் மோடி, மு.க.அழகிரியும் காமராசரை ஒப்பிட்டு பேசியுள்ளது தற்செயலானதா? அல்லது திட்டமிட்டு பேசியதா? என அரசியல் வல்லுனர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் காமரசர் பெயரை வைத்து விமர்சனம் செய்துள்ளது காங்கிரஸ் மற்றும் திமுகவினர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.