திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 நவம்பர் 2024 (10:09 IST)

தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரல்: உதயநிதிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து..!

Kamal
தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் திமுக தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது பிறந்தநாள் வாழ்த்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய போது திமுகவை கடுமையாக எதிர்த்தவர் கமல்ஹாசன் என்பதும், டிவி உடைக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் தெரிந்தது. ஆனால் தற்போது அவர் திமுக கூட்டணியில் இணைந்து உள்ளார் என்பதும், கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவித தொகுதிகளும் வாங்கிக் கொள்ளாமலே திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran