செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (17:30 IST)

மோடியை எதிர்த்து போராடிய மதிமுக தொண்டர் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியதால் பரபரப்பு!

பிரதமர் மோடி இன்று திருப்பூர் வருகை தருவதையொட்டி அவருக்கு கருப்புக்கொடி காட்ட இன்று காலை முதல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அவருடைய தொண்டர்களும் திருப்பூரில் கூடியிருந்தனர். 
 
கொடி காத்த குமரனின் ஊரில் மோடியை நுழையவிட மாட்டோம் என மதிமுகவினர் சூளுரைக்க, ஒருகட்டத்தில் பொறுமையிழந்த காவல்துறை அதிகாரிகள் மதிமுகவினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
 
இந்த நிலையில் திருப்பூரில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மதிமுக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்ய வந்தபோது,  கைது செய்யக் கூடாது என கூறிக்கொண்டே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ஒரு வாலிபர் தற்கொலை முயற்சி செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
உடனடியாக போலீசார் அவரிடம் சமாதானாம் பேசி கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். நீண்ட நேரத்திற்கு பின் கீழே அந்த வாலிபர் கீழே இறனக்கினார்.,