1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. #GoBackModi trends for the hatrick time in Twitter

மோடிக்கு ஹேட்ரிக் அவமானம்: 3வது முறையாக டிரெண்டாகும் #GoBackModi

மோடி
மக்களவைத் தோ்தல் நெருங்குவதால் தோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் வருகிறார். இதனால் இப்போதே டிவிட்டரில் #GoBackModi டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
தமிழகம் வரும் மோடி நீல வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி, அரசினா் தோட்டம், உயா் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வா் பழனிசாமியுடன் இணைந்து திறந்து வைக்கிறார்.
 
இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தமிழக அமைச்சா்கள் ஜெயகுமார், எம்.சி. சம்பத், சட்டப்பேரவைத் தலைவா் தனபால் உள்ளிட்டோல் கலந்து கொள்கின்றனா்.
இதற்கு முன்னர் மோடி இரண்டு முறை தமிழகத்திற்கு வந்த போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் தமிழர்களாக் டிரெண்டாக்கப்பட்டது. இப்போது இது மூன்றாவது முறை. ஆனால், இதில் சுவாரஸ்யம் என்னவெனில் தமிழக மக்கள் மட்டுமின்றி ஆந்திரா மக்களும் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
#GoBackModi என்ற ஹேஷ்டேக் மட்டுமின்றி #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்
என்னங்கடா இப்படி இறங்கிடீங்க..? #GoBackModi கலக்கல் மீம்ஸ்!