1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 நவம்பர் 2024 (09:46 IST)

காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள்: தேர்தல் தேதி அறிவிப்பு

Election
நாடு முழுவதும் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்டமாக மாநிலங்களவை தேர்தல் குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆந்திராவில் 3 இடங்கள், ஒடிசா, மேற்கு வங்கம், ஹரியானா மாநிலங்களில் தலா ஒரு இடம் மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக இருக்கும் நிலையில், இந்த காலியாக உள்ள ஆறு எம்பிக்கள் தேர்தல் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், அன்றைய தினம் மாலை அல்லது இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 10 என்றும், வேட்பாளர் திரும்ப பெற கடைசி தேதி டிசம்பர் 13 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 ஆந்திர பிரதேசத்தில் வெங்கடரமணா ராவ் மோபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ், ரியாகா கிருஷ்ணையா ஒடிசாவில் சுஜீத் குமாஎ, மேற்கு வங்கத்தில் ஜவ்ஹார் சிர்காஎ, ஹரியானாவில் கிருஷ்ணா லா் பன்வார் ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்திருந்ததால், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



Edited by Siva