செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:33 IST)

தேர்தல் முடிஞ்சதும் ஒரு நல்ல சேதி இருக்கு! – சர்ப்ரைஸ் வைத்த மு.க.ஸ்டாலின்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இரு தினங்களே உள்ள நிலையில் ஒரு நல்ல செய்தி சொல்லவிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “என்னை சந்திக்க வருபவர்கள் மட்டுமல்ல பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் செல்கிறபோது அங்கேயும் புத்தகங்கள் கொடுக்கும் பழக்கம் பரவிவருவதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு நான் வழங்கியிருக்கிறேன். நான் எழுதியிருக்கக்கூடிய ‘‘உங்களில் ஒருவன்’’ என்ற நூலின் முதல்பாகத்தை இந்த மாதஇறுதியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.

முதல்-அமைச்சராக வந்துள்ள நான் ஒரு அறிவிப்பை வெளியிடவேண்டும் என்றுதான் ஆசையோடு வந்தேன். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அந்த அறிவிப்பை இப்போது அறிவிக்க முடியாது. இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள். இன்னும் 2 நாட்கள் பொறுத்திருங்கள். விரைவில் நல்ல செய்தியை நான் அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.