புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஜனவரி 2021 (13:26 IST)

முதல்வரின் சவாலை ஏற்க தயார், ஆனா ஒரு கண்டிஷன்: முக ஸ்டாலின்

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து முக்கிய அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்துவருகின்றன 
 
குறிப்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் காரசாரமாக ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துண்டு சீட்டு இல்லாமல் தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய முக ஸ்டாலின் தயாரா என சவால் விட்டார் 
 
இந்த சவாலை முக ஸ்டாலின் தற்போது ஏற்றுக் கொண்டு அதற்கு ஒரு நிபந்தனையும் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று தமிழக ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள். அடுத்த நிமிடமே- விவாதத்திற்கு தேதி குறியுங்கள் நான் வருகிறேன் என்று கூறியுள்ளார்.
 
மு க ஸ்டாலினின் இந்த நிபந்தனையை தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்வாரா? இருவருக்கும் இடையே நேரடி விவாதம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்