திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (09:34 IST)

தூத்துக்குடி சென்ற எடப்பாடியார்; குறுக்கே வந்த மாடு!? – கார் விபத்தால் பரபரப்பு!

தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனத்தை தொடர்ந்து சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென் தமிழக பகுதிகளில் சுற்றுப்பயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் தூத்துக்குடியிலிருந்து சேரன்மாதேவிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கட்சியினர் வாகனங்களும் அணி வகுப்பாக சென்றன.

இந்நிலையில் வல்லநாடு அருகே முதல்வரின் வாகனம் கடந்து சென்ற நிலையில் பின்னால் வந்த கட்சியினரின் கார் ஒன்று திடீரென சாலை தடுப்பில் மோதியது. இதனால் பின்னால் வந்த காரும் தடுப்பில் மோதிய காரின் மீது மோதியதால் பரபரப்பு எழுந்தது.

இரு கார்களும் சேதமடைந்திருந்தாலும் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கார்கள் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததால் நிலைத்தடுமாறி கார் மோதியதாக கூறப்படுகிறது.