வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (18:59 IST)

திரையரங்குகளில் 100% அனுமதி விதிமீறல் - மத்திய அரசு

தமிழகத்தில் 100% தியேட்டர்கள் பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிடுள்ளதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலயில், தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி குறித்து அமைச்சர் உதயகுமார் விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து அவர்  கூறியுள்ளதாவது :

மருத்துவக்குழுவினர் அறிவுரையில் பேரிந்தான் தமிழகத்தில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகளை சரிவரக் கடைபிடிக்காத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 100% தியேட்டர்கள் பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிடுள்ளதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், 50% இருக்கைகள் மட்டுமே தியேட்டர்களில் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தியேட்டர்களில் 100% அனுமதி என்பது மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நீர்த்துபோகச்செய்யும் எனவும் ,மத்திய அரசிப் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டுமெனக் கூறியுள்ளார்.