தொடர்புடைய செய்திகள்
- செந்தில் பாலாஜியின் முக்கிய பொறுப்பை முத்துசாமியிடம் ஒப்படைத்த முதல்வர்..!
- 500 மதுக்கடைகளை மூடிவிட்டு புதிய கடைகளை திறப்பதா? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
- ஆபாச பதிவு....விஜய் ரசிகர்கள் யார் என்பதனையும் உணர்த்தும்- ராஜேஸ்வரி பிரியா
- கணினிமயமாகும் டாஸ்மாக். இனி பில் உண்டு, ரூ.10 கிடையாது..!
- டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி..!
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்று செய்தியாளளை சந்தித்தபோது டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை என்று கூறினார்.
டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை, 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், தவறான பாதைக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிப்பதை நிறுத்தி, அதனால் வருமானம் குறைந்தால் பிரச்சினை இல்லை என்று கூறிய அமைச்சர் முத்துசாமி, மதுபானங்களை டெட்ரா பாக்கெட் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும், 40 சதவீதம் பேர் மற்றவர்களுக்காக காத்திருந்து மது அருந்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் டாஸ்மாக் கடைக்கான நேரத்தை மாற்றியமைப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளில் கேமிரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், வருமானத்தை அதிகரிப்பது நோக்கமல்ல, தவறான பாதைக்கு சென்றுவிடாமல் தடுப்பது தான் நோக்கம் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்,.
Edited by Mahendran
