புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஆனந்தகுமார்
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:15 IST)

மேம்பாலத்தை அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியிலிருந்து பொதுமக்கள் வசதிக்காகவும் கனரக வாகனங்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்வதற்காகவும் மாயனூர் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலத்தை அதன் கட்டுமான பணிகளை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர்  பார்வையிட்டனர்.

கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது மாயனூர் கதவணை செல்லவேண்டுமென்றால் இடையே செல்லும் ரயில்வே கேட்டை கடக்க வேண்டும் பல நேரங்களில் ரயில் வருவதால் மூடப்படுகிறது இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

குறிப்பாக மாயனூரில் இருந்து திருச்சி மாவட்டம் சித்தூர் நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியாக கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகிறது இதனால் மாயன் ஊரிலிருந்து திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டம் செல்பவர்களுக்கு 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் பயணம் மிச்சமாகிறது ரயில்வே கிராசிங் ஒரு உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர் .

மேலும் இதுதொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடம் மாயனூர் பகுதிவாழ் மக்கள் குழுவாக சென்று இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க கோரினர் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தென்கரை வாய்க்கால் பழைய ஆயக்கட்டு வாய்க்கால் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் வழியாக ஒரு பாலம் அமைப்பதற்காக 6 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் துவங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

நடைபெற்றுவரும் இப்பணியை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் பொதுப்பணித்துறை அலுவலர் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர் இப்பாலம் பணி விரைந்து முடித்தார் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு லாபமும் பொது மக்களுக்கு சாதகமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது