மோடி என்ன லேசுபட்ட ஆளா பதவிய தூக்கி கொடுக்க; ஏமாற்றத்தை மழுப்பும் ஓபிஎஸ் மகன்!
மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதை குறித்து நான் இதுவரை யோசித்ததே இல்லை என ஓபிஎஸ் மகன் எம்பி ரவீந்திரநாத் பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் வெற்றி பெற்றவர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்துவிட வேண்டும் என ஓபிஎஸ் கடுமையாக போராடியும் அது அனைத்தும் வீணாய் போனாது.
ஆனால், ஒருவழியாக ரவீந்திரநாத்தை எம்பி ஆக்கி ராஜ்யசபா அனுப்பி வைத்தார் ஓபிஎஸ். இந்நிலையில், ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் பதவி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
மத்திய அமைச்சரவையில் நான் இருப்பேனா என்று சொல்ல முடியாது. அது குறித்து நான் யோசிக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி நான் இதுவரை ஒருமுறை யோசித்து பார்த்தது கூட இல்லை.
கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். கட்சி தலைமையின் முடிவுதான் இறுதியானது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால் அளிக்கும் மழுப்பல் பதில் போல உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஓபிஎஸ் தன் மகனுக்கு பதவி வாங்கி கொடுக்க டெல்லிக்கு அத்தனை பயணங்கள் மேற்கொண்டார். ஆனால், அவ்வளவு எளிதாக மோடி பதவியை வழங்கவில்லை, வழங்கவும் மாட்டார். தமிழகத்தில் பாஜகவின் கால் ஊன்றாத நிலையில் மத்திய அமைச்சர் பதவிக்கு வாய்ப்பே இல்லை என்றுதான் தெரிகிறது.