வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஆனந்தகுமார்
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (20:19 IST)

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில் கரூர் மாவட்டத்திற்கு அமராவதி நீர்!

அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடை பகுதியான கரூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தது.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து கடந்த 10 ந் தேதி திருப்பூர் புதிய ஆயக்கட்டு பகுதிக்கு மட்டும் தண்ணீர் திறக்க முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பகுதியான கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்காமல் இருந்த நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் கடந்த 16 ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது இந்த தண்ணீர் கரூர் செட்டிபாளையம் மணிக்கு வந்த  நிலையில்  தற்போது அமராவதி நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.