வீடியோவெல்லாம் நீக்க முடியாது; அடம்பிடிக்கும் மாரிதாஸ்! – நீதிமன்றத்தில் முறையீடு!
தனியார் செய்தி தொலைக்காட்சி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் யூட்யூபர் மாரிதாஸ் வீடியோவை நீக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூட்யூபரான மாரிதாஸ் சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதுடன் இதுகுறித்து தான் அளித்த புகாரின் பேரில் தொலைக்காட்சி தலைமையிடம் இருந்து மெயில் வந்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தங்கள் செய்தி சேனல் குறித்த ஆதாரமற்ற தகவல்களை பரப்புவதாக செய்தி சேனலும், மூத்த பத்திரிக்கை செய்தியாளரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் செய்தி சேனல் குறித்த அவதூறு வீடியோவை நீக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் இதுவரை அந்த வீடியோ நீக்கப்படாத நிலையில் விசாரணையில் வீடியோக்களை அகற்றாதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.
வீடியோவை அகற்றாதது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனியாக தொடர அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்டு 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.