70 வயது பாட்டிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த நபர் – மதுரையில் பரபரப்பு!
மதுரையில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டிக்கு ஒரு நபர் பாலியல் தொல்லைக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கிராமம் ஒன்றில் 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். அவரை அடிக்கடி வேவு பார்த்த கார்த்திக் பாண்டி என்ற காமக் கொடூரன், வீட்டிற்குள் புகுந்த கார்த்தி பாண்டி, மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக தவறான பேசி நடந்துள்ளார். மூதாட்டி அவரை எச்சரித்ததும் அங்கிருந்து ஓடியுள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அறிவுரையின் படி, ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் கார்த்திக் பாண்டியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.