1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:58 IST)

ஏன் அந்த படத்துக்கு பின் விஜய்யுடன் இணையவில்லை… காரணம் இதுதானா!

மின்சாரக் கண்னா படத்துக்குப் பின்னர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் விஜய்யுடன் ஏன் இணையவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

90 களில் தயாரிப்பாளர்களின் இயக்குனர் எனப் பெயர் எடுத்தவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். எவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருந்தாலும் சொன்ன தேதிக்குள் சொன்ன பட்ஜெட்டுக்குள் படம் எடுத்துக் கொடுத்து விடுவதில் வல்லவர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் ஆஸ்தான இயக்குனராக இருந்த அவர் விஜய்யை வைத்து மின்சாரக் கண்ணா என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கினார்.

அதன் பிறகு இருவரும் இணையவே இல்லை. இது குறித்து இருவரும் இணையும் வாய்ப்பு மீண்டும் இரண்டு முறை வந்ததாகவும், ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மீண்டும் இணைந்திருந்தால் அந்த படம் விஜய் கேரியரில் முக்கியமானப் படமாக அமைந்திருக்கும் என சொல்லி வருகின்றனர்.