1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMDK Vijayakanth warns public for danger due to corona

ஊரடங்கு ஆபத்து தான்... எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்!

ஊரடங்கு தளர்வு
தற்போது வழங்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களுக்கு ஆபத்து தான் என தேமுதிக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிக்கையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றி வருகிறது. 
 
ஆனால், தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி, வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு நீக்கம் உள்ளிட்டவைகளால் பெரும்பான்மையான துறைகள் செயல்பட துவங்கியுள்ளது.
 
மக்கள் அனைவரும் இதனை சுதந்திரமாக உணர்ந்தாலும், இதில் பல்வேறு ஆபத்துக்களும் உள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை கொரோனா தாக்கம் அதிக அளவில் இருக்கும் என பல்வேறு கருத்துகள் வெளியாகி உள்ளது. 
 
எனவே நோய் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எரிந்துவிட்டால் எந்த பாதிப்பும் இல்லாமல் அனைவரும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழலாம். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், வருமுன் காப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நான் நடிகன் அல்ல என்னை விளம்பரம் தேட.... ஈபிஎஸ் தடாலடி!