திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (12:16 IST)

வைகையில் கள்ளழகர் எழுந்தருளல்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

kallalagar
மதுரையில் நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிலையில் இந்த வைபவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வழிபடும் பக்தர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி வைகை ஆற்றில் நீர் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் ஆற்றங்கரையில் நின்றபடியே தரிசனம் செய்ய மட்டுமே அனுமதி என்றும் ஆற்றுக்குள் இறங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது