உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு குடமுழுக்கு! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு செய்யப்பட்டது.
மலேசியா முருகன் கோவிலில் உள்ள 140 அடி உயர முருகன் சிலைதான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருந்து வந்தது. இந்த சிலையை திருவாரூரை சேர்ந்த தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் மலேசியாவில் உருவாக்கி தந்தனர்.
இந்நிலையில் தங்களது சாதனையை தாங்களே முறியடிக்கும் விதமாக சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் 146 அடி கொண்ட முத்துமலை முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். முத்துமலை முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடமுழுக்கு நிகழ்வில் கலந்து கொண்டனர்.