ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2024 (11:22 IST)

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

Gold
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. வரி குறைப்பு காரணமாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. 
 
இந்நிலையில் வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.101க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1,01,000க்கும் விற்பனையாகிறது.

 
தங்கம் விலை 40 ரூபாய்க்கு குறைந்தாலும், ஒரு சவரன் 56 ஆயிரத்து தாண்டி விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது எட்டாக்கனியாகவே உள்ளது.