செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (18:12 IST)

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

வேலூர் மாவட்டம்  பேரணாம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சென்னை வரை செல்லும் அரசு பேருந்து ஓட்டுனராக வாணியம்பாடி வெள்ளைகுட்டை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரும் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றனர்
இந்த நிலையில் பேரணாம்பட்டிலிருந்து குடியாத்தம் வழியாக
பள்ளிகொண்டா சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது  வேப்பூர் அருகே சாலையில் அருகே உள்ள தடுப்பின் மீது அரசு பேருந்து மோதி விபத்து உள்ளானது.
 
இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு பேருந்து சாலையின் அருகே இருந்த தடுப்பின்  மீது மோதி முன்பக்க டயர் கழன்று விழுந்து அரசு பேருந்து சாய்ந்து நின்றது இதில் சில பயணிகளுக்கு  லேசான காயம் ஏற்பட்டது அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.