ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (18:41 IST)

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியின் இரண்டாம் சனிக்கிழமையான  இன்று  108 வைணவ தலங்களில் ஒன்றான கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, 
 
தேவநாத சுவாமியைக் காண கடலூர்,புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும்  மொட்டை அடித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்தினர்.