செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (07:50 IST)

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி: பருவத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

Madras University
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி பருவத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளில் நேரடியாக படிக்க முடியாதவர்கள் தொலைதூர கல்வி மூலம் பட்டம் பயின்று வருகிறார் என்பதும் இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் தொலைதூரக் கல்வி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடும் அறிவிப்பை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியாகிய செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் கீழ் இளநிலை, முதுநிலை, தொழில், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாத பருவத் தேர்வு அக். 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இதற்கான ஹால் டிக்கெட் இன்று (செப். 27) வெளியாகிறது. மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணைய தளத்தில் சென்று ஹால் டிக்கெட் களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Edited by Siva