வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (18:17 IST)

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Jayakumar
சொத்து வரியை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறமையற்ற அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
 
வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம்‌ இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 
இந்த சொத்து வரி‌ உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும். இதனால் மாணவர்கள்,இளைஞர்கள்,வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும்.
 
சொத்து வரியா?மக்களின் சொத்தை பறிப்பதற்காக வரியா?
 
Edited by Mahendran