1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Last bus from chennai today details

இன்றிரவு சென்னையில் இருந்து கடைசி பேருந்து எத்தனை மணிக்கு?

சென்னை
நாளை அதிகாலை 4 மணி முதல் மே 24ஆம் தேதி 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன 
 
நேற்றும் இன்றும் இரவு முழுவதும் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை அதிகாலைக்குள் அனைத்து பேருந்துகளும் போய் சேர வேண்டிய இடத்தில் சரியான முறையில் சேர வேண்டும் என்பதால் இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பும் கடைசி பேருந்துகள் குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது இது குறித்து தகவல் இதோ
 
சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு மார்த்தாண்டத்துக்கும், இரவு 7 மணிக்கு நாகர்கோவிலுக்கும் கடைசி சிறப்பு பேருந்து!
 
சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு தூத்துக்குடிக்கும், இரவு 7.30 மணிக்கு செங்கோட்டைக்கும் கடைசி சிறப்பு பேருந்து!
 
சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு திருநெல்வேலிக்கும், திண்டுக்கல்லுக்கும் கடைசி சிறப்பு பேருந்து!
 
சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு மதுரைக்கும், 11.45க்கு திருச்சிக்கும் கடைசி சிறப்பு பேருந்து!
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இது திமுக அரசு அல்ல.. அனைவருக்கும் சொந்தமான அரசு : ஸ்டாலின் கடிதம்!