வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 8 மே 2021 (18:11 IST)

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் ....கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைசச்ர்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதையடுத்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே சொந்த ஊருக்குச் செல்வோருக்கு இப்பேருந்துவசதிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேசமயம் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில்  மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

எனவே போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆம்பி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.