1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 மே 2021 (08:26 IST)

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு!

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் ஆய்வாளர் பாதுகாப்பு. 

 
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 165 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கும் தொடர்ந்து ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவல்துறையினர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.