திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (12:00 IST)

கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி ஏன் பேசவில்லை: கேபி முனுசாமி விளக்கம்..!

பாஜக உடனான கூட்டணி முறிந்தது என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த அறிக்கையை கூட கேபி முனுசாமி தான் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார். 
 
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது என இதுவரை எடப்பாடி பழனிச்சாமி தனது வாயிலிருந்து சொல்லவே இல்லை.  மேலும் அவரது பெயரில் இருந்து எந்த விதமான அறிக்கையும் வெளியாகவில்லை. 
 
அதுமட்டுமின்றி பாஜக உடனான கூட்டணி முறிந்தது என்ற அறிக்கையில் கூட ஒரு வார்த்தை கூட மோடி அமித்ஷா ஜேபி நட்டா ஆகியவர்களை விமர்சனம் செய்து வார்த்தைகள் இல்லை. 
 
எனவே தமிழக பாஜக அண்ணாமலையை மட்டுமே குறிவைத்து  தற்போதைக்கு அதிமுக காய் நகர்த்தி வருவதால் விரைவில் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 
இந்த நிலையில் தகுந்த நேரம் வரும்போது எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவிப்பார் என கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran